1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (17:22 IST)

2024 -டி-20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசி புதிய திட்டம்

அடுத்த  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கவுள்ள நிலையில், அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகக் கிரிக்கெட் போட்டியில் டி-20 தொடர் பிரபலமானது. அதிலும், டி-20 உலகக் கோப்பை விறுவிறுப்பு குறையாதது.

சமீபத்தில்,  ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அடுத்து டி-20 உலகக்கோப்பை திரைப்படம் வரும் 2024 ஆம்  ஆண்டு நடக்கவுள்ளது.

இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும், அதன்படி, மொத்த இந்த உலகக் கோப்பை தொடரின்போது, 55 போட்டிகள் நடத்த ஐசிசசி கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj