Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விராத் கோஹ்லியை போல என்னாலும் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர் அதிரடி


sivalingam| Last Updated: புதன், 15 மார்ச் 2017 (14:45 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் ஆசம் என்ற இளம் வீரர் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 ஒருநாள் போட்டிகளில் 4 சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் 1168 ரன்கள் குவித்துள்ளார். அவருடைஅ சராசரி ரன்விகிதம் 53.09 ஆகும். மேலும் நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 116 ரன்கள் எடுத்துள்ளார்.

 


இந்நிலையில் பாபர் ஆசமை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் விராத் கோஹ்லியுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூறிய பாபர் ஆசம், 'என்னை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்திய அணிக்காக விராட் கோலி எப்படி சிறப்பாக விளையாடி வருகிறாரோ, அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக என்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்

மேலும் ‘‘விராட் கோலி ஒரு மாதிரியாக விளையாடுபவர். நான் ஒரு மாதிரி விளையாடுபவன். என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் வெற்றிக்காக விளையாடுவேன். கோலி இந்திய அணியின் வெற்றிக்காக எப்படி விளையாடுகிறாரோ, அதேபோல் பாகிஸ்தானுக்காக என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :