1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (16:34 IST)

பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்தியா இல்லாமலேயே ஆடுவோம்: ஹசன் அலி

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா இல்லாமலே ஆடுவோம் என பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் பொதுவான இடங்களில் நடந்தால் மட்டுமே இந்திய அணி கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தெரிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறது.

நாங்கள் இந்தியாவுக்கு வருவது போல் அவர்களும் பாகிஸ்தான் வந்து ஆட வேண்டும், ஒருவேளை இந்தியா வர விரும்பவில்லை என்றால் இந்திய அணி இல்லாமலேயே சாம்பியன் டிராபி கோப்பையை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து இருந்ததை அடுத்து ஹசன் அலி இந்த கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran