1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (15:01 IST)

Brilliant Catch!! சச்சினையே பாராட்ட வைத்த ஹர்லின் தியோல் !

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்லின் தியோல் பிடித்த கேட்ச் ஒன்று பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. 

 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.
 
இந்நிலையில் நேற்று துவங்கிய டி20 போட்டியில், இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பிடித்த கேட்ச் ஒன்று பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. இந்த கேட்ச்சை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த கேட்ச் எனக்கு இதுதான் என்று அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.