ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:42 IST)

கல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்.. ஆப்பு வெச்சது ‘தல’ தோனி!

MS Dhoni
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொலக்த்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஜாலி பதிவு இன்றை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 235 ரன்களை குவித்த நிலையில் அதி சேஸ் செய்ய முடியாத கொல்கத்தா அணி 186 ரன்களில் சென்னையிடம் தோல்வி அடைந்தது.

முதல் பாதியின் சிஎஸ்கேவின் சிக்ஸர் மழையினால் ஏற்பட்ட பரபரப்பு இரண்டாம் பாதியில் சிஎஸ்கே வீழ்த்திய விக்கட் மழையினால் தொடர்ந்தது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைந்துள்ளது. இதை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிஎஸ்கே ரசிகர்களிலேயே மிகவும் பிரபலமானவரும், முன்னாள் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டபோது “இந்த உலகத்துல ஒன்னை விட ஒன்னு பெட்டராதான் இருக்கும். ஆனா எப்படி ரூம் போட்டு யோசிச்சு பார்த்தாலும் இந்த சென்னை அணியில் அவங்க தோனியை விட பெட்டரா ஒன்னு இல்ல. கல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர். ஆப்பு வெச்சது தல தோனிதான்” என பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth,K