கோலி- கும்ப்ளே உச்சகட்ட மோதல்: பின்வாங்கிய கங்குலி!!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
வீரர்களுக்கான சம்பளத்தை 150 சதவீதம் உயர்த்த கேட்டார் கும்ப்ளே. இது தவிற கேப்டன் பதவியில் இருப்பவருக்கு ஊதியத்தில் 25 சதவீதம் அதிகம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்தில் துளி கூட விருப்பமில்லாத கோலி, கும்ப்ளேவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும், கும்ப்ளே வீரர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதில்லை எனவும், வீரர்கள் மத்தியில் அரசியல் செய்கிறார் எனவும் கோலி கங்குலியிடம் பூகர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது, கோலி - கும்ப்ளே இடையே என்ன நடக்கிறது என புரியவில்லை. அதை பற்றி இப்போது பேச விரும்பவில்லை.
பயிற்சியாளர் என்பவர் கேப்டனுக்கு உதவியாக இருக்க வேண்டும். கேப்டன் என்பவர் பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அணியை சிறந்த முறையில் வழி நடத்த முடியும்.
தற்போது நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை என்றால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். எனவே இருவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என கங்குலி தெரிவித்தார்.