Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரவி சாஸ்திரியை டம்மியாக்கி, கோலிக்கு செக் வைத்த கங்குலி!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:09 IST)
கங்குலியின் விருப்பத்திற்கு மாறாக இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்ந்தெடுத்துள்ளது. 

 
 
ரவி சாஸ்திரியைவிட சேவாக் தகுதியானவர் என்பது கங்குலி கருத்து. ஆனால் அணியினரின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை பயிர்ச்சியாளராக நியமித்துள்ளனர்.
 
ஆனால், கங்குலி சில விஷயங்களில் கறாராக இருந்துள்ளார். அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டும் நியமிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
 
அதற்கு ஏற்ப கங்குலியின் விருப்பப்படி, பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். ஜாகீர்கானும், டிராவிட்டும், கங்குலி கேப்டனாக இருந்தபோது அவரது தலைமையில் விளையாடியவர்கள். மேலும், கங்குலியின் நம்பிக்கை பாத்திரமானவர்கள். 
 
எனவே கோலியின் கட்டுப்பாட்டில் முழு அணியும் செல்லக்கூடாது என்பதனை மனதில் வைத்து கங்குலி சரியாக செயல்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :