வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:20 IST)

கோலி நல்ல கேப்டன்… ஆனால் ரோஹித் ஷர்மா அதை விட சிறந்த கேப்டன் – மீண்டும் குட்டையை குழப்பும் கம்பீர் !

இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்கவேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடந்த முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோலியை விட ரோஹித்தே சிறந்த கேப்டன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இன்னமும் ரோஹித் சர்மாவை நியமிக்காதது வெட்கக்கேடு. அப்படி அவருக்கு அளிக்கவில்லை என்றால் அது இந்திய அணிக்குதான் துரதிர்ஷ்டம். ஒருவரை கேப்டனாக நியமிக்க அளவுகோல்கள் என்ன என்று தெரியவில்லை? ரோஹித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதனால் விராட் கோலியை ஒரு வடிவத்துக்கும் ரோஹித்தை ஒரு வடிவத்துக்கும் கேப்டனாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் கம்பீரின் கருத்தைப் பலரும் நிராகரித்தனர். இந்நிலையில் இப்போது மீண்டும் இதுகுறித்து பேசியுள்ள கம்பீர் ‘கோலி நல்ல கேப்டன்தான். அவரின் கேப்டன்ஸியில் குறைகள் இல்லை. ஆனால் ரோஹித் ஷர்மா அவரை விட நல்ல கேப்டன். இருவரின் கேப்டன்ஷிப்புக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து இந்திய அணிக்கு தேர்வு செய்கிறார்கள். அப்படி என்றால் ஏன் சிறப்பாக செயல்படும் கேப்டனை இந்திய அணிக்கு கேப்டனாக்கக் கூடாது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.