செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (07:06 IST)

ஒரே நாளில் நான்கு சதங்கள்! என்ன நடக்குது இங்கிலாந்து மைதானத்தில்?

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய பயிற்சி போட்டிகளில் ஒரே நாளில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 421 ரன்கள் அடித்து அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 421 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 101 ரன்களும், ரஸல் 25 பந்துகளில் 54 ரன்களும், லீவீஸ் 50 ரன்களும் ஹோல்டர் 47 ரன்களும் எடுத்தனர்.
 
422 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 330 ரன்கள் எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணியில் பிளண்டில் 106 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 85 ரன்களும் சோதி 39 ரன்களும் எடுத்தனர். 
 
முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி கொடுத்த 360 என்ற இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்து. இந்த போட்டியில் தோனியும், கே.எல்.ராகுலும் சதமடித்தனர்.
 
நேற்று ஒரே நாளில் இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் இரண்டு சதங்களும், நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்கள் தலா ஒரு சதமும் அடித்து மொத்தம் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானத்தில் ஒரே நாளில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளதால் இதே நிலை உலகக்கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது