1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (08:31 IST)

ராஜஸ்தான் வெற்றியால் ஐந்து அணிகளுக்கு இடையே போட்டி!

நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 10 புள்ளிகள் எடுத்து 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள சென்னை மற்றும் டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டாலும் மூன்றாவது நான்காவது இடங்களை பிடிப்பது எந்த அணி என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது
 
பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கண்ட ஐந்து  அணிகளுக்குமே பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் இதுவரை இல்லாத அளவில் ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது