1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 ஜூன் 2014 (18:13 IST)

உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்தி மெக்சிகோ வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணியை வீழ்த்தி 1-3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.
 
ஆட்டம் தொடங்கிய 3 ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் ஓ பெரால்டா பவுல் செய்தார். முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
 
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னர், 46 ஆவது நிமிடத்திலேயே குரோஷியாவின் மாண்ட்சுகிக் பவுல் செய்தார். 66 ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் வேஸ்குவேசிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
 
72 ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் மார்கெஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். 75 ஆவது நிமிடத்தில் மீண்டும் மெக்சிகோவின் குவார்டாடோ சிறப்பான முறையிர் ஒரு கோல் அடித்தார்.
 
82 ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் ஹெர்ணாண்டஸ் கோல் அடித்தார். இதனால் இந்த அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்நதது. இதைத் தொடர்ந்து குரோஷியா அணியைச் சேர்ந்த பெரிசிக் 87 ஆவது நிமிடத்தில் முதல் கோலை இடித்தார்.
 
இதனால் குரோஷியாவை 1-3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயனாக மெக்சிகோவின் தடுப்பாட்டக்காரர் மார்க்கெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.