வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (12:21 IST)

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஃபிஃபாவில் சீர்த்திருத்தங்கள்

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும், உலகளவில் கால்பந்து விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் அமைப்பான ஃபிஃபாவில் பல சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அதன் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார்.
ஃபிஃபாவின் அதிகாரிகளின் நேர்மையை பரிசோதிப்பது, பதவியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலமே பதவியில் இருக்க முடியும் என்பது உட்பட பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என ஜூரிக்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு அவர் அறிவித்தார்.
 
இதனிடையே அந்த செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ஒருவர் அரங்கிலுள் புகுந்து நாணயத் தாள்களை செப் பிளாட்டரை நோக்கி வீசியதால் கூட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
 
இதையெடுத்து அவர் கோபத்தின் உச்சத்துக்கு சென்றதைக் காண முடிந்தது.
 
இன்று எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஃபிஃபா அமைப்பின் புதிய தலைவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தெடுக்கப்படவுள்ளார்.
 
புதிய தலைவர் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் வானொலியில் தனது தொழிலை மேற்கொள்ளவுள்ளதாகவும் செப் பிளாட்டர் கூறுகிறார்.