மை டூ பாய்ஸ்: சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவு!!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ வீட்டில் விராத் கோலி, ரஹானே, ஷிகார் தவான், தோனி ஆகியோர் தங்கி இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அதில் தோனியின் மனைவி ஷாக்சி டுவைன் பிராவோவின் மகன் மற்றும் ஷிகர் தவானின் மகன் ஆகியோருடன் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ’மை டூ பாய்ஸ்’ என பதிவிட்டுள்ளார்.