வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:03 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி!

England
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 304 இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்கள் என்று பாகிஸ்தான் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்ததால் அந்த அணிக்கு 167 என்ற இலக்கு வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மூன்றையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva