திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (11:22 IST)

பாபர் ஆசமின் சதம் வீண்… 3 ஆவது போட்டியையும் வென்ற இங்கிலாந்து!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நேற்று மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை வென்றுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசமின் அற்புதமான சதத்தால் 332 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்சின் அற்புதமான சதத்தால் மீதம் 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது.