திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:09 IST)

என்னா பிட்ச்சுப்பா இது… அதுக்குள்ள இங்கிலாந்து 5 விக்கெட் காலி!

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவும் தனது முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்கள் மளமளவென விழுந்து வருகிறது. 60 ரன்களை சேர்ப்பதற்குள்ளாகவே 5 விக்கெட்களை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் கலக்கிய அக்ஸர் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.