விறுவிறுப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெறுமா?
விறுவிறுப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெறுமா?
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி முதல் இன்னின்ங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மழை காரணத்தால் மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரெத்வெயிட் 75 ரன்களும், புரூக்ஸ் 68 ரன்களும், சேஸ் 51 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 182 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தற்போது 219 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இன்று கடைசி நாள் போட்டியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து