திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:50 IST)

சிராஜ் மீது பந்தை தூக்கி எறிந்த ரசிகர்கள்… கடுப்பான கோலி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்ததால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் கடந்த போட்டியில் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் கார்க்குகளை வீசி அவமரியாதை செய்தனர். அதே போல நேற்று லீட்ஸ் மைதானத்திலும் தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ‘சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்தனர். அது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல’ எனக் கூறியுள்ளார்.