Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜாக்கிரதை! விராட் கோலியை சீண்டாதீர்கள் - ஆஸி. அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (19:02 IST)
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலியை சீண்டாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி அந்நாட்டு அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

வருகின்ற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் ஆஸ்திரேலியா அணி, எதிரணியினரை சீண்டிப்பார்க்கும் ஒரு ஆயுதத்தையும் பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக் ஹஸ்ஸி, “ஆஸ்திரேலிய அணியினர் விராட் கோலி சீண்ட வேண்டாம். விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு சரியான போட்டியாளராக இருப்பார் என்று நினைகிறேன்.

அவர் எப்போதுமே களத்தில் சண்டைவதையும், பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வதையும் விரும்பக்கூடியவர். நாம் சரியான முறையில் திட்டங்கள் வகுத்து, அவரை வீழ்த்த முயற்சிப்பது நல்ல பலனை தரும். அதை விடுத்து வார்த்தை மோதல்களை பிரயோகப்படுத்துவது அவசியமற்றது. பின்னர், அதுவே அவரை சிறப்பாக விளையாட தூண்டிவிடும்.

அதிகப்படியான வார்த்தை மோதல்களினால், உங்கள் கவனங்கள் சிதறடிக்கப்படும். அது தேவையற்றது. உங்கள் திறமைகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :