வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (06:27 IST)

தடகள வீராங்கனைகளின் அரசி பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்

இந்திய தடகள வீராங்கனைகளின் அரசி என்று புகழப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவு செய்துள்ளது. உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிப்பதன் மூலம் இந்திய தடகள வீராங்கனைக்கு ஊக்கமளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.




 


கேரளாவைச் சேர்ந்த பிடி உஷா சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது இளம் தடகள வீரர்களைத் தயார் பணியில் பிடி உஷா ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பி.டி.உஷாவின் வாழ்க்கையைப் திரைப்படமாக எடுக்கலாம் என்ற கோரிக்கை தற்போது எழுந்து வருவதை அடுத்து இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாளை கான்பூர் ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதும் இது உஷாவுக்கு கிடைக்கும் இரண்டாவது டாக்டர் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.