ரோகித்துக்கு போட்டியாக தோனி அடித்த சிக்ஸ் வீடியோ வெளியீடு!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:38 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி சிக்ஸ் அடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. 
 
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது அரபு அமீரகத்தில் நடக்க முடிவாகியுள்ளது. 
 
வரும் செப்டம்பர் 19 முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் ஐபிஎல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
 
ஐபிஎல் 2020 தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் ஆமீரகம் சென்று சேர்ந்து கொரோனா கால தனிமைப்படுத்தல்களை முடித்துக் கொண்டு இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியின் போது அடித்த சிக்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி சிக்ஸ் அடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. இதோ இந்த வீடியோ... 
 


இதில் மேலும் படிக்கவும் :