Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்திற்குள் ஓடி வந்த தோனி ரசிகர் செய்தது? நெகிழ்ச்சி வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 11 ஜனவரி 2017 (11:45 IST)
இந்திய ஏ அணி, இங்கிலாந்து லெவன் அணி மோதிய பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இது தோனி கேப்டனாக களமிறங்கும் கடைசி போட்டி.

 
 
பொதுவாகவே பயிற்சி ஆட்டத்தைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வரமாட்டார்கள். ஆனால் கேப்டனாக தோனிக்காக அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
 
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கேப்டன் தோனி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  திடீரென பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் ஓடி வந்தார்.
 
ரசிகர் தன்னினம் தான் வருகிறார் என்பதை உணர்ந்த தோனி அவருக்கு கைகொடுக்கும் செய்கையாக கையை நீட்டினார். ஆனால் ரசிகரோ சற்றும் எதிர்பாராத விதமாக தோனியின் காலில் விழுந்தார். 
 
பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் ரசிகரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதில் மேலும் படிக்கவும் :