திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (18:11 IST)

தோனியின் பிறந்த நாள்: கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தோனிக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 
 
இந்திய அணி கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தற்கு தோனி ஒரு முக்கிய காரணமானவர். ஐசிசியின் மூன்று இந்திய அணிக்கு வென்று தந்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 
 
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி ஒரு நாள் தொடரை வென்று இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
 
தோனிக்கு யுவராஜ் சிங், ஷேவாக், முகமது கயூப், லட்சுமணன் ஆகியோர் டூவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் ஹெலிகாப்டர் என ட்விட் செய்துள்ளார்.
 
அதே போல் தோனி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தோனி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தோனியின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.