புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:12 IST)

தோனி 100: சேப்பாக்கில் புதிய சாதனை!!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 3 டி20 போட்டிகளிலும், சென்னையில் விளையாட உள்ளது.


 

 
இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. 
 
22 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்பொழுது களமிறங்கிய தோனி, ஹர்திக் பாண்டியாவும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 
தோனி 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
 
இப்போட்டியில், தோனி தனது 66 வது ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடிக்கும் 100 வது அரைசதமாகும். 
 
இந்த போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.