Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தற்போது தோனியின் கவனம் இவர் மீது தான்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (12:04 IST)
இந்திய ஒருநாள் கேப்டன் தோனி, ஜார்கண்ட் அணியின் இளம் வீரர் மீது தனி கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
இந்திய ஒருநாள் அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், போட்டிகள் எதுவும் இல்லாமல் ஓய்வில் உள்ளார். 
 
இதனால், ஜார்கண்ட் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். இதில் இவர் அலோசனையில் ஜார்கண்ட் அணி களமிறங்குவதால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தற்போது தோனி, 18 வயதான இளம் ஜார்கண்ட் வீரர் இஷான் கிஷான் மீது தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.
 
இந்த ஆண்டு இஷான் பங்கேற்ற போட்டிகளில் மொத்தமாக 27 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதில் இவர் 273 ரன்கள் எடுத்த போட்டியில் 17 சிக்சர்கள் பறக்கவிட்டார். இரண்டாவதாக தோனியைப்போல இஷானும் ஒரு விக்கெட் கீப்பர்.
 
தன்னைப்போலவே இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வீரரை உருவாக்கி தர வேண்டும் என தல தோனி, இஷான் மீது பெரிதும் ஆர்வம் காட்டுவதாக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :