புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (20:17 IST)

3வது டி20: முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த கேப்டன் தவான்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் தலா ஒரு வெற்றி இரு அணிகளும் பெற்றுள்ள நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்கள். முதல் ஓவரின் 4வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேப்டன் தவான் விக்கெட்டை இழந்தார்
 
சற்று முன் வரை இந்தியா 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி தான் டி20 தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்ல தீவிரமாக விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது