வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (15:59 IST)

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தவான்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் தவான் அரைசதம் அடித்து கலக்கியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் வழக்கமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் மூன்றாவது வீரராகக் களமிறங்குவார். ஆனால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி 20 தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய 80 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்தபின்னர் பேசிய அவர் ‘இனிமேல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கலாம் என இருக்கிறேன். ரோஹித்துடன் விளையாடுவது சிறப்பாக இருக்கும். ஐபிஎல் தொடரிலும் ஓபனிங்க்தான் விளையாட உள்ளேன். நான் அல்லது ரோஹித் களத்தில் இருந்தால் இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் உணர்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இன்றைய ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவரது தேர்வை சரிதான் என நிரூபிப்பது போல அரைசதம் அடித்துக் களத்தில் அவுட் ஆகாமல் நிற்கிறார் தவான். சற்று முன்வரை இந்திய அணி 122 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து நிதானமாக ஆடிவருகிறது. தவான் 56 ரன்களுடனும் கோலி 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.