செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (07:01 IST)

சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி: ஸ்டோனிஸ் அசத்தல்

சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி: ஸ்டோனிஸ் அசத்தல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பரபரப்பான சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன
 
இதனை அடுத்து விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களை உயர்த்தினார்கள். ஆனால் அதன் பின் களமிறங்கிய ஸ்டோனிஸ் அதிரடியாக 21 பந்துகளில் 53 ரன்கள் அடித்தால் டெல்லி அணியின் ஸ்கோர் 157 ஆக உயர்ந்தது 
 
இந்த நிலையில் 158 என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் 21 ரன்களும், மயாங்க் அகர்வால் 89 ரன்களும் அடித்தால் பஞ்சாப் அணி மிக எளிதில் வெற்றியை பெற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தவுடன் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்தும், அடுத்த மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் போட்டி டை ஆனது
 
இதன் பின் நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 2 ரன்களே எடுத்ததால் டெல்லி அணி மிக எளிதாக 3 ரன்கள் எடுத்து இந்த போட்டியை வென்றது. பேட்டிங் மற்றும் பவுலின் ஆகிய இரண்டிலும் அசத்திய ஸ்டோனிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்