1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (07:31 IST)

ராஜஸ்தானை புரட்டி போட்ட டெல்லி கேப்பிடல்.. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி..!

Delhi Capitals
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்த நிலையில் 222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் 86 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த வெற்றியால் டெல்லி அணி தற்போது 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் சிஎஸ்கே, ஹைதராபாத், டெல்லி மற்றும் லக்னோ ஆகிய நான்கு அணிகள் 12 புள்ளிகள் உடன் இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு  தகுதி பெற்றுள்ள நிலையில் 12 புள்ளிகள் எடுத்த நான்கு அணிகளில் இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva