ஒலிம்பிக் வில்வித்தையில் 9வது இடம்! – இந்தியாவின் தீபிகா குமாரி!
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியாக ஆர்ச்சரி என்னும் வில்வித்தை போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி பங்கேற்றுள்ளனர். ரேங்கிங் சுற்று ஆட்டத்தில் தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு வீராங்கனையான அதானு தாஸ் 329 புள்ளிகளே பெற்று 31வது இடத்தில் பின் தங்கியுள்ளார்.