ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (17:47 IST)

சுப்மன் கில் விக்கெட்டை எடுத்துட்டா போதும், கப் சென்னைக்குதான்! ரசிகர்கள் கருத்து.!

subman gil
சுப்மன் கில் விக்கெட்டை எடுத்து விட்டால் போதும் கோப்பை சென்னை அணிக்கு தான் என பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
குஜராத் அணியை சேந்த சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் அடுத்தடுத்து சதம் அடித்து வருவது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குஜராத் அணியுடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் மோத இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டம் யார் என்பது நாளை தெரிந்துவிடும். 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து குஜராத்துக்கு போட்டியை பார்க்க நேரில் செல்லும் ரசிகர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்,  அப்போது பெரும்பாலான ரசிகர்கள் சுப்மன் கில்ஒருவரை மட்டும் வீழ்த்தி விட்டால் போதும் கப்பு சென்னைக்கு தான் என கூறி வருகின்றனர். 
 
சுப்மன் கில் தவிர குஜராத் அணியில் வேறு எந்த பேட்ஸ்மேனன் பெரிய அளவில் விளையாடவில்லை என்றும் ஆனால் சுப்மன் கில்லை வீழ்த்த கூடிய அளவுக்கு நம்மிடம் ஜடேஜா போன்ற பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran