Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி விரைவில்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:06 IST)
இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு பிரச்னை காரணமாக முழு போட்டித்தொடர் 2007ம் ஆண்டுக்கு பின் இன்று வரை நடைபெறவில்லை. 

 
 
ஆனால், சர்வதேச தொடர்களில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் அவ்வப்போது இரு அணிகலும் மோதிவருகின்றன.
 
இதை தவிர்த்து, 2009ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மற்ற நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றது.
 
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் 2012-13ம் ஆண்டு நடைப்பெறுவதாக இருந்தது. பிரச்னை காரணமாக அந்த போட்டி தொடர் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வலியுறுத்தியது.
 
இந்நிலையில், இரு நாட்டு பிரச்னையும் விரைவில் சரியாகும். அவ்வாறு ஆன பின்பு போட்டிகள் நடைபெறும். அது வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சர்யார் கான் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :