திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (22:36 IST)

டோக்கியோ ஒலிம்பிக்கில் 29 பேருக்கு கொரோனா

ஒலிம்பிக் களத்தில் இருப்போருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில்,  ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

மேலும், தற்போது ஒலிம்பிக் போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு யாருக்கும் கொரொனா தொற்றுப் பாதிப்பில்லை என ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் களத்தில் இருப்பவர்களில் சுமார் 29 பேருக்கு  கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரொன தொற்று அதிகரித்து வரும் நிலையில், இத்தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.