Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காமன்வெல்த் போட்டி: மல்யுத்தம் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

v
Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (15:01 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த பிரிவில் இந்தியாவுக்கு 5-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா ஏற்கனவே 22 தங்கப்பதக்கங்களை குவித்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் ஏற்கனவே சுஷில் குமார், ராகுல் அவாரே, பஜ்ரங், சுமித் மாலிக் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
 
இந்நிலையில், இன்று பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்ட்டை வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார்.
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :