வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (17:54 IST)

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியது

ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கின.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி கார்ரா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்திய அணி சார்ப்பில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி சென்றார். இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர்.
 
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 474 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்து வருகிறது.

இந்தியா இதுவரை 16 முறை பங்கேற்று 155 தங்கம் உள்பட 438 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக 101 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.