செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (15:12 IST)

கிரிக்கெட் ஜாம்பவான் மறைவு – ரஞ்சி கோப்பையில் முறியடிக்க முடியாத சாதனை!

ரஞ்சி கோப்பையில் விளையாடி 750 விக்கெட்களை வீழ்த்திய ஜாம்பவான் பந்து வீச்சாளரான ராஜேந்திர கோயல் இன்று மரணமடைந்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் முக்கியமானது ரஞ்சி கோப்பை. ஆண்டு தோறும் நடக்கும் இந்த போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுபவர்களை அணிக்குள் தேர்வு செய்வதும் நடக்கும்.  ஆனால் அதில் சிறப்பாக விளையாண்டு இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்களும் உண்டு. அந்த வரிசையில் முக்கியமானவர் இடதுகை சுழல்பந்து வீச்சாளரான ராஜேந்திர கோயல்.

1958 முதல் 1985 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 750 விக்கெட்களை வீழ்த்தி ரஞ்சி கோப்பைகளில் அதிகவிக்கெட்களை வீழ்த்தியவர் என்ற அவரது சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. 44 வயது வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கோயல் அதற்கு பின் நடுவராக செயல்பட்டார். இந்நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று அவர் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 77.

அவரது மறைவுக்கு சச்சின் மற்றும் கங்குலி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.