செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:09 IST)

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை அமெரிக்க புறக்கணிப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

 
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள்,அமெரிக்க தனது தூதரக அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பாது என்று தெரிவிக்கப்பட்டது. சீனாவின் மனித உரிமை வரலாற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சீனா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் செயல், விளையாட்டில் அரசியலை நுழைக்கும் நடவடிக்கை. சீனா இதற்கு தகுந்த எதிர் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.