வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2015 (15:13 IST)

சீன ஒபன் பட்மிண்டன் : சாய்னா அதிர்ச்சி தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தி யாவின் சாய்னா நெவால் பரிதாபமாக தோல்வி அடைந்தார்.


 
 
சீனாவின் புஸவ் நகரில் நேற்று நடைபெற்ற சீன ஒப்பன் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஜூரூயியை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் 12-21, 15-21 என்ற நேர் செட்களில் சாய்னா தோல்வியை தழுவினார்.
 
ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய வீ ஜூரூயி 39 நிமிடங்களில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சாய்னா நெவாலை தோல்வியடைய செய்து சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.