14 ரன்களுக்கு ஆல் அவுட்: மோசமான உலக சாதனை
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் சீனா, கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் எல்.கே.ஜியை கூட தாண்டவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை
இவ்வளவிற்கும் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்த சீன அரசு பல கோடிகளை இரைத்து வருகிறது. ஆனாலும் சீன வீரர்கள் இன்னும் கிரிக்கெட்டில் தேறவில்லை. இந்தநிலையில் பாங்காங்கில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் சீன அணி 14 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது மோசமான உலக சாதனையாகும்
தாய்லாந்து மகளிர் டி-20 போட்டி தொடரில் ஒரு போட்டியில் நேற்று சீன அணியும் ஐக்கிய அரபு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த சீன அனி 10 ஓவர்களில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்கவில்லை என்பதும் மீதியுள்ள வீராங்கனைகள் 2,3,3,4 ரன்களை எடுத்தனர் என்பதும் 2 ரன்கள் உதிரி வகையில் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது