ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (19:38 IST)

’டை’பிரேக்கரில் முடிந்தது செஸ் ஆட்டம் : உலக சாம்பியன் யார்...?

லண்டனில்  நடந்து வருகின்ற உலக செஸ் தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்த அனைத்து சுற்றுகளும் சமன் நிலையாகியுள்ளன. எனவே இறுதி  வெற்றியாளர் யார் என்பதை நிர்ணயிக்கப்போகும்  போட்டி நாளை நடைபெற உள்ளது . இதில் வெற்றி பெறுபவரே சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் பேபியோ காருணா என்பவர் மோத இருக்கிறார்.
 
கார்ல்சனுக்கும் பேபியோவுக்குமிடையே நடந்த 11 சுற்றுகளும் டிரா ஆகியுள்ள நிலையில் 12 ஆவது சுற்றில் மூன்று மணி நேரம் நடந்த போட்டியின் போது 31 ஆவது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய முடிவு செய்தனர்.
 
இந்நிலையில் சாம்பியன் யார் எனபதை தீர்மானிக்கும் டைபிரேக்கர் போட்டி நாளை நடப்பதால் உலகமெங்கும் செஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.