மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியை தோற்கடித்த சேப்பாக்கம் கில்லிஸ்


sivalingam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (00:17 IST)
டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தோற்கடித்தது


 
 
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது.  164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சேப்பாக் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த மதுரை அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இன்னும் புள்ளிக்கணக்கையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

webdunia

இதில் மேலும் படிக்கவும் :