ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (22:47 IST)

சேப்பாக் அணிக்கு மேலும் ஒரு வெற்றி! 15 பந்துகளில் 5 விக்கெட்டுக்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய லீக் போட்டி சேப்பாக் மற்றும் தூத்துகுடி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 19.3 ஓவரகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. 128 ரன்கள் என்ற எளிய இலக்கை தூத்துகுடி அணி விரைவில் எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணி கடைசி 15 பந்துகளில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்ததே தோல்விக்கு காரணமாக இருந்தது
 
ஸ்கோர் விபரம்:
 
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 127 ரன்கள் 19.3 ஒவர்கள்
 
கோபிநாத்: 53
சசிதேவ்: 27
 
தூத்துகுடி பேட்ரியாட்ஸ்: 95 ரன்கள் 18.5 ஓவர்கள்
 
ஸ்ரீனிவாசன்: 50
சுப்பிரமணிய சிவா: 13
 
ஆட்டநாயகன்: கோபிநாத்
 
இன்று நடைபெற்ற மற்றோரு போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி திருச்சி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
 
ஸ்கோர் விபரம்:
 
ரூபி திருச்சி வாரியர்ஸ்: 121/7  20 ஓவர்கள்
காஞ்சி வீரன்ஸ்: 122/3  19.1 ஓவர்கள்