1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (14:56 IST)

மும்பை எப்.சி.யை வெல்லுமா சென்னை எப்.சி. அணி?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.– மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.
 
8 அணிகள் மோதும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
 

 
இந்த போட்டி தொடரின் 15 ஆவது லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று 28.10.14 (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறுகிறது. இதில் சென்னையின் எப்.சி.–மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் 2–வது லீக் போட்டி இதுவாகும்.
 
சென்னையின் எப்.சி. அணி இதுவரை விளையாடியுள்ள மூன்றில் இரண்டு வெற்றியையும் ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேபோல் மும்பை அணி மூன்றில் இரண்டு தோல்வியையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.
 
சென்னையின் எப்.சி. அணியில் இடம் பிடித்துள்ள இலானோ (பிரேசில்) இதுவரை எல்லா ஆட்டங்களிலும் கோல் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.