திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (08:02 IST)

சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையே போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 13 புள்ளிகள் உடன் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் வரும் பத்தாம் தேதி மோத இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான நேரடியாகவும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் சேப்பாக்கம் மைதானத்தில் எட்டாம் தேதி காலை 9:30 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும் எனவும், ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva