புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (16:18 IST)

ஆமை வேகத்தில் தோனி ஆட்டம் – கோஹ்லியின் சதத்திற்குப் பலன் கிடைக்குமா ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்க இலக்கை நோக்கி வீறுநடைப் போட்டு சென்று கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஷான் மார்ஷின்(133) அதிரடி சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது.  ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (48) மற்றும் ஸ்டாய்னிஸ் (29) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸி ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதையடுத்து 299 ரன்கள் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித்தும் தவானும் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் (43) மற்றும் தவான் (32) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ராயுடு மற்றும் தோனியோடு ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. சிறப்பாக விளையாடிய கோஹ்லி தனது 39 சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லி சேஸிங்கின் போது அடிக்கும் 24 ஆவது சதம் இதுவாகும்.

சதமடித்த கோஹ்லி 104 ரன்களில் ரிச்சட்ர்ஸன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இன்னும் இந்தியாவின் வெற்றிக்கு 38 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்படுகிறது. தோனியும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் விளையாடி வருகின்றனர். தோனி ஆமை வேகத்தில் 34 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்தியாவுக்குத் தேவைப்படும் ரன்ரேட் விகிதம் 9 க்கு மேல் இருப்பதால் அதிரடியாக விளையாடி வெற்றியைக் குவிக்குமா என்று இந்திய ரசிகர்கள் ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர்.