வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 18 மே 2024 (09:57 IST)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பிரவீன் ஹூடா என்பவர் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அமைப்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையினரிடம்  ஊக்க மருந்து சோதனை நடத்த வருவதற்கு வசதியாக எங்கு இருக்கிறேன் என்ற தகவலை கடந்த ஒரு ஆண்டில் மூன்று முறை பிரவீன் ஹூடா அளிக்க தவறிவிட்டார் என்றும் இதனை அடுத்து அவர் ஒன்றரை ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அறிவித்துள்ளது. 
 
இந்த ஆண்டு மே மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த தடைக்காலம் இருக்கும் என்பதால் அவர் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. 
 
இந்த தடையை எதிர்த்து பிரவீன் ஹூடா மேல்முறையீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran