பதக்கங்களை வாரி குவித்து வரும் இந்தியா! – தரவரிசையில் 5வது இடம்!
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பல பதக்கங்களை குவித்து 5வது இடத்தில் நீடித்து வருகிறது.
22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கி நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு போட்டிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று நடந்த காமன்வெல்த் கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய பெண்கள் அணி தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்று சாதனை புரிந்தனர்.
குத்துச்சண்டை போட்டியில் இறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் சாகர் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை தக்க வைத்தார்.
இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என 55 பதக்கங்களை வென்று 5 வது இடத்தில் உள்ளது. பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 165 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.