Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்தில் பில்லி சூன்யம்: வெற்றியாய் மாறிய தோல்வி; அதிர்ச்சி வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (10:43 IST)
கால்பந்து விளையாட்டு போட்டியின் நடுவே மாந்திரீக சூனியம் வைத்து கோல் அடித்த வெற்றி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
ருவாண்டா நாட்டில் அஜம் ருவாண்டா பிரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் முக்குரா விக்டோரியம் அணியும், ரயோன் ஸ்போர்ட்ஸ் அணியும் மோதியது.
 
போட்டியின் போது முக்குரா விக்டோரியா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது. பல முயற்சிகள் செய்தும் ரயோன் ஸ்போர்ஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 
 
இந்நிலையில் ரயோன் அணி வீரர் மவ்சா கமரா, எதிரணி கோல் போஸ்ட் அருகே சென்று மாந்திரீகம் செய்து ஒரு சிறிய பொருளை சூனியமாக வைத்து ஓடி வந்தார்.
 
பின்னர் அடுத்த சில நிமிடங்களில் வீரர் மவ்சா கமரா ரயோன் அணி சார்பாக அசத்தலான ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.
 
போட்டியில் தோல்வி அடைவது போல இருந்த ரயோன் அணி சூனியம் வைத்து போட்டியை சமன் செய்தது. இதையடுத்து சூனியம் வைத்ததன் காரணமாக பிரச்னை எழுந்துள்ளது. ரயோன் அணிக்கும், மவ்சா கமராவுக்கும் அபராதம் விதிக்கப்படுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :