வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (08:58 IST)

அடுத்தடுத்து 2 கோல்கள் போட்ட ரொமெலா: பெல்ஜியம் அணி அபார வெற்றி

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்  போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
 
இந்த போட்டியில் பெல்ஜியம், பனாமா என இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தடுப்பு ஆட்டத்தை கையண்டதால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என்ற நிலையில் இருந்தது.
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் அபாரமாக ஒரு கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
 
ஒரு கோல் போட்ட உற்சாகத்தில் பெல்ஜியம் அணியினர் தங்களது ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியதால் அந்த அணியின் முன்னணி வீரர் ரொமெலோ லகாகு 69வது மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்ததால் பெல்ஜியம் அணி 3-0 என கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 
 
இந்த கோல்களை சமன்படுத்த பனாமா அணியினர் எவ்வளவு முயன்றும் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. 
 
முன்னதாக நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவை வீழ்த்தியது