புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (16:16 IST)

நாடு திரும்பும் பாண்ட்யா, ராகுல் – விடாமல் துரத்தும் சர்ச்சை

ராகுல் மற்றும் பாண்ட்யா இருவரும் பெண்கள் குறித்தும் இந்திய அணியின் ஓய்வறைக் குறித்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதையடுத்து இருவரையும் ஆஸ்திரேலியத் தொடரின் பாதியிலேயே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 6 ஆம் தேதி ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் பங்குபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் மற்றும் இந்திய அணியின் ஓய்வறை தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.

இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு விளக்கம் அளிக்க வேண்டும் பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடையும் விதித்துள்ளது.

இதையடுத்து அணியிலும் அவர்களுக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அவர்களுக்கு எதிரானக் கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் நாடு திரும்பி தங்கள் மீதான் குற்றச்சாட்டுகு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா தொடர் மட்டுமல்லாது நியுசிலாந்து தொடரிலும் இருவரும் விளையாட மாட்டார்கள் என அறிவித்துள்ளது. மேலும் பிசிசிஐ சம்மந்தமான எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் விசாரணை முடியும் வரைப் பங்கேற்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது. இதனால் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.